गुरुवार, दिसंबर 19 2024 | 02:13:12 PM
Breaking News
Home / अन्य समाचार / தில்லியில் முதலாவது போடோலாந்து பெருவிழாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

தில்லியில் முதலாவது போடோலாந்து பெருவிழாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Follow us on:

புதுதில்லியில் உள்ள சாய் இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நவம்பர்15 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் முதலாவது போடோலாந்து பெருவிழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.

நவம்பர் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் மஹோத்சவம் நடைபெறுகிறது. இது அமைதி நிலைத்திருக்கவும், துடிப்பான போடோ சமூகத்தை உருவாக்கவும் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு பெரிய திருவிழா ஆகும். இது போடோலாந்தில் மட்டுமல்லாமல், அசாம், மேற்கு வங்கம், நேபாளம் மற்றும் வடகிழக்கின் பிற சர்வதேச எல்லைப் பகுதிகளிலும் வசிக்கும் பூர்வீக போடோ மக்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போடோலாந்து பிராந்தியத்தைச் சேர்ந்த பிற சமூகங்களுடன் போடோ சமூகத்தின் வளமான கலாச்சாரம், மொழி மற்றும் கல்வியை மையமாகக் கொண்ட ‘வளமான பாரதத்திற்கான அமைதி மற்றும் நல்லிணக்கம்’ என்பது மஹோத்சவத்தின் கருப்பொருளாகும். இது போடோலாந்தின் கலாச்சார மற்றும் மொழி, பாரம்பரியம், சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் சுற்றுலாத் திறன் ஆகியவற்றின் செழுமையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் 2020-ஆம் ஆண்டில் போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து மீட்பு மற்றும் தகவமைப்பு பயணத்தை மஹோத்சவம் கொண்டாடும். இந்த அமைதி ஒப்பந்தம் போடோலாந்தில் பல தசாப்தங்களாக நீடித்த மோதல்கள், வன்முறை மற்றும் உயிர் இழப்புகளைத் தீர்த்தது மட்டுமல்லாமல், பிற அமைதி தீர்வுகளுக்கும் ஒரு வினையூக்கியாக செயல்பட்டது.

“இந்திய பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு பங்களிக்கும் வளமான போடோ கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இலக்கியம்” என்ற அமர்வு பெருழிழாவின் சிறப்பம்சமாக இருக்கும். மேலும் வளமான போடோ கலாச்சாரம், மரபுகள், மொழி மற்றும் இலக்கியம் குறித்த விவாதங்கள் நடைபெறும். “தேசிய கல்விக் கொள்கை, 2020 மூலம் தாய்மொழி வழிக் கல்வியின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற மற்றொரு அமர்வும் நடைபெறும். போடோலாந்து பிராந்தியத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் “பழங்குடி கலாச்சார சந்திப்பு மற்றும் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா மூலம் ‘துடிப்பான போடோலாந்து’ பிராந்தியத்தை உருவாக்குவது குறித்த கலந்துரையாடல்” என்ற கருப்பொருளிலான கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்படும்.

போடோலாந்து பிராந்தியம், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களான நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியவற்றிலிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலாச்சாரம், மொழி மற்றும் கலை ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …