गुरुवार, दिसंबर 19 2024 | 10:25:40 PM
Breaking News
Home / अन्य समाचार / பிரதமர் விரைவுசக்தியின் கீழுள்ள நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 83-வது கூட்டம் ஓசூர் – ஓமலூர் இரட்டை ரயில் பாதை உட்பட 8 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்தது

பிரதமர் விரைவுசக்தியின் கீழுள்ள நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 83-வது கூட்டம் ஓசூர் – ஓமலூர் இரட்டை ரயில் பாதை உட்பட 8 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்தது

Follow us on:

நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் நெட்வொர்க் திட்டமிடல் குழுவின்  83-வது கூட்டம் இன்று நடைபெற்றது. திட்ட ஆதரவாளர்கள், பாஸ்கராச்சார்யா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியலுக்கான தேசிய நிறுவனப் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் பன்முக இணைப்பு மற்றும் தளவாட செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.

பிரதமர் விரைவுசக்தி கொள்கைகளின் அடிப்படையில் பலவகை உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முனைகளுடன் கடைசி மைல் இணைப்பு, ஒருங்கிணைந்த இணைப்பு மற்றும் ஒத்திசைவான திட்ட அமலாக்கம் உட்பட எட்டு திட்டங்களையும் வலைப்பின்னல் திட்டமிடல் குழு மதிப்பீடு செய்தது. இந்தத் திட்டங்கள் தளவாட செயல்திறனை அதிகரிப்பதன் மூலமும்  பயண நேரங்களைக் குறைப்பதன் மூலமும்  அவை சேவை செய்யும் பிராந்தியங்களுக்கு கணிசமான சமூக-பொருளாதார நன்மைகளை வழங்குவதன் மூலமும் தேசிய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் நிறைவடையும் போது, இந்தியாவின் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடையற்ற இணைப்பின் நன்மைகள் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் நீட்டிக்கப்படுவதை இவை உறுதி செய்கின்றன. பன்முக போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும், முக்கியமான உள்கட்டமைப்பு இடைவெளிகளை சரி செய்வதன் மூலமும், இந்த முயற்சிகள் ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான அரசின் தொலைநோக்குடன் இணங்கிப்போகின்றன.

ரயில்வே அமைச்சகத்தின் திட்டங்கள்

ஓசூர் – ஓமலூர் இரட்டை வழித்தடம்

இந்த 147 கி.மீ ரயில் பாதை இரட்டிப்பு திட்டம் ஓசூரின் வேளாண்-தொழில்துறை பிராந்தியத்தை தமிழ்நாட்டின் வணிக மையமான சேலத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பாதை சிமெண்ட் உற்பத்தி, வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல், ஆட்டோமொபைல் தளவாடங்கள் போன்ற முக்கியமான துறைகளுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் பெங்களூரின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்துடன் வலுவான இணைப்புகளைப் பராமரிக்கும்.

பன்முக இணைப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் சேலம் எஃகு ஆலை, தமிழ்நாடு காகித நிறுவனம்  மற்றும் சுற்றியுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற தொழில்துறை மையங்களை பெங்களூர் மற்றும் சேலம் விமான நிலையங்களுடன் இணைக்க வாய்ப்புள்ளது.

வார்தா – பல்ஹர்ஷா 4 வது வழித்தடம் இந்த 134.52 கி.மீ  திட்டம் மகாராஷ்டிராவின் வார்தா மற்றும் சந்திரபூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் தில்லி-சென்னை பாதையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும். இடார்ஸி – நாக்பூர் 4 வது வழித்தடம் இது நாக்பூரில் உள்ள சர்வதேச பயணிகள், சரக்கு மைய விமான நிலையம் (மிஹான்), சர்னி மற்றும் கோரடியில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், பிதாம்பூரில் வளர்ந்து வரும் தொழில்துறை மையங்களுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோண்டியா – பல்ஹர்ஷா இரட்டைப் பாதை திட்டம் இந்தப் பாதை கெல்சாரில் உள்ள முக்கிய இரும்புத் தாது சுரங்கங்களையும், சந்திரபூரில் உள்ள நிலக்கரி சுரங்கங்களையும் இணைக்கிறது, இது தென் மத்திய மற்றும் தென்கிழக்கு ரயில்வே மண்டலங்களில் உள்ள தொழில்களுக்கு சுமூகமான போக்குவரத்தை உறுதிசெய்யும். அலுபரி – நியூ ஜல்பைகுரி நான்கு வழித்தடம் இந்த 56.60 கி.மீ  திட்டம் வடக்கு வங்காளம் மற்றும் பீகாரில் ரயில் இணைப்பை மேம்படுத்த உதவும். விவசாய விளைபொருட்கள், சிமெண்ட் மற்றும் தொழில்துறை பொருட்களை கொண்டு செல்வதற்கு முக்கியமான பயணிகள் மற்றும் சரக்கு இயக்கத்தை இந்த வழித்தடம்  ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்லாரி – சிக்ஜாஜூர் இரட்டைவழித்தடம்  185 கி.மீ இரட்டிப்பு திட்டம் பல்லாரி, சித்ரதுர்கா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இரும்புத் தாது, நிலக்கரி, சிமெண்ட் மற்றும் உணவு தானியங்களின் இயக்கத்தை எளிதாக்கும்.

செகந்திராபாத் – வாடி நான்கு வழித்தடம்இந்த 173.18 கிமீ திட்டம் தென் மத்திய இந்தியாவில் ஒரு முக்கியமான சரக்கு மற்றும் பயணிகள் வழித்தடமான செகந்திராபாத்- வாடி இடையே 3 மற்றும் 4 வது பாதைகளை நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத் திட்டங்கள்

இம்பால் – கக்சிங் – லாம்காய் சாலை இந்த 44.517 கிமீ சாலை மேம்பாட்டுத் திட்டம் மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலை வளர்ந்து வரும் விவசாய மற்றும் வர்த்தக மையமான கக்சிங்குடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …