शुक्रवार, दिसंबर 27 2024 | 01:40:38 AM
Breaking News
Home / अन्य समाचार / 2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்கள், முறைப்படுத்தாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்கள், முறைப்படுத்தாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது

Follow us on:

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் முறைப்படுத்தப்படாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி 63.28 மில்லியன் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70.18 மில்லியன் டன்னாக இருந்தது. அதாவது நிலக்கரி இறக்குமதி 9.83% குறைந்துள்ளது.

இதே போல் நிலக்கரி அடிப்படையிலான  உள்நாட்டு அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 8.59% குறைந்தது. அதாவது 10.71 மில்லியன் டன்னிலிருந்து 9.79 மில்லியன் டன்னாக குறைந்தது.   இந்தத் துறைகள் உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை சார்ந்திருப்பது அதிகமாகி உள்ளதை இது காட்டுகிறது. இருப்பினும், எஃகு தொழிற்சாலைக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையில் செயல்படும் அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதியின் அளவு 1.36% அதிகரித்து 129.52 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 127.78 மில்லியன் டன்னாக இருந்தது.

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த   இறக்குமதி செய்யப்பட்ட   நிலக்கரி மதிப்பை பொறுத்தவரை ரூ.1,38,763.50 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,52,392.23 கோடியாக இருந்தது. நிலக்கரி கொள்முதலில் மிகவும் சிக்கனத்தை  கடைப்பிடித்ததன் விளைவாக ரூ.13,628.73 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், நிலக்கரி கொண்டு செல்வதை முறைப்படுத்துவதன் மூலமும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு நிலக்கரி அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது.   அதே நேரத்தில், மின்சாரம், எஃகு போன்ற முக்கியமான தொழில்துறைகளுக்குத் தேவைப்படும் நிலக்கரி இறக்குமதியும் தொடர்ந்து பராமரிக்கப்படும். தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி முன்னேறும் வேளையில், எரிசக்திப் பாதுகாப்பு, குறைந்த செலவு ஆகியவற்றை உறுதி செய்வதிலும் அமைச்சகம் கவனம் செலுத்தும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …