सोमवार, दिसंबर 23 2024 | 07:50:01 PM
Breaking News
Home / अन्य समाचार / லாவோஸ் நாட்டில் தனது மூன்று நாள் பயணத்தின் நிறைவாக பாதுகாப்பு அமைச்சர், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் அமைச்சர்களை சந்தித்தார்

லாவோஸ் நாட்டில் தனது மூன்று நாள் பயணத்தின் நிறைவாக பாதுகாப்பு அமைச்சர், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் அமைச்சர்களை சந்தித்தார்

Follow us on:

லாவோஸ் நாட்டில் மூன்று நாள் பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்,  பயணத்தின் கடைசி நாளான 2024 நவம்பர் 22, அன்று வியன்டியானில், ஜப்பான் பிரதமர் திரு ஜெனரல் நகாடானி மற்றும் பிலிப்பைன்ஸின் தேசிய பாதுகாப்பு செயலாளர் (பாதுகாப்பு அமைச்சர்) திரு கில்பர்டோ தியோடோரோ ஆகியோரை சந்தித்தார்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் தொழில் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். கடந்த வாரம் ஜப்பானில் யூனிகார்ன் கப்பல் கம்பம் அமலாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மைல்கல் நிகழ்வை நினைவுகூர்ந்த இவர்கள், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில், கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

இந்திய-ஜப்பான் படைகளுக்கு இடையேயான செயல்பாட்டை மேலும் மேம்படுத்த, இரு நாடுகளுக்கும் இடையிலான விநியோகம் மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தின் பரஸ்பர ஏற்பாடு மற்றும் பல்வேறு இருதரப்பு மற்றும் பலதரப்பு பயிற்சிகளில் ராணுவங்களின் பங்கேற்பு குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். விமானத் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஆசியான் மற்றும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், அடுத்த சுழற்சிக்கான கூட்டம் ஆகியவற்றில் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளராக பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர், கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அமைச்சரை  வரவேற்றார். பல்வேறு துறைகளில் வல்லுநர்களின் பரிமாற்றம், பாதுகாப்புத் தொழில், பயங்கரவாத எதிர்ப்பு, விண்வெளி மற்றும் கடல்சார் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

புதுதில்லிக்கு புறப்படுவதற்கு முன்பு, பாதுகாப்பு அமைச்சர் வியன்டியானில் உள்ள வாட் சிசாகாட் கோயிலுக்கு ( புத்த கோயில்) சென்று  மடாதிபதி ஸ்ரீ மகாவேத் சித்தகரோவிடம் ஆசி பெற்றார்.

மலேசியா, லாவோஸ், சீனா, அமெரிக்கா, நியூசிலாந்து, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்திய திரு ராஜ்நாத் சிங், 11-வது ஏடிஎம்எம் மாநாட்டில் பங்கேற்றார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …