बुधवार, अप्रैल 09 2025 | 02:57:33 AM
Breaking News
Home / अन्य समाचार / தேசிய மாணவர் படை தினம் : சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் மரியாதை

தேசிய மாணவர் படை தினம் : சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் மரியாதை

Follow us on:

தேசிய மாணவர் படை (N.C.C.) தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இன்று (நவம்பர் 24) மலர் மரியாதை  செலுத்தப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரிய இளைஞர் அமைப்பாகிய என்சிசி அமைப்பு 1948-ம் ஆண்டு நவம்பர்24-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் 76-வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல்  கரன்பீர்சிங் பிரார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாண்டு வாத்தியம் முழங்க மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த லெப் ஜெனரல் கே. எஸ். பிராரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார்  உள்ளடக்கிய என்.சி. சி அமைப்பின்

துணை தலைமை இயக்குநர் கமொடோர் எஸ்.ராகவ் வரவேற்றார்.

என் சி சி  கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, கே. எஸ். பிரார், அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக சென்னையை மையமாகக்கொண்ட என்சிசி 13-வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழு, கம்பீரமான அணிவகுப்பு நடத்தினர்.

  

  

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

नंदन झा ने एसओजी ग्रैंडमास्टर्स सीरीज़ वेस्ट जोन फाइनल के लिए शानदार रेड कार्पेट इवेंट की अगुआई की

अजिंक्य रहाणे और अंगद बेदी ने बढ़ाई कार्यक्रम की शोभा मुंबई, मार्च 2025: एसओजी ग्रैंडमास्टर्स …

News Hub