सोमवार, मार्च 31 2025 | 05:25:27 AM
Breaking News
Home / अन्य समाचार / இந்திய வேதியியல் கவுன்சில், ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருதை வென்றது

இந்திய வேதியியல் கவுன்சில், ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருதை வென்றது

Follow us on:

2024 ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருது இந்திய வேதியியல் கவுன்சிலுக்கு (ICC) 2024 நவம்பர் 25 அன்று ஹேக்கில் நடந்த ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) மாநாட்டில் 29-வது அமர்வின் போது உலகளாவிய ரசாயனத் தொழில்துறையின் நிபுணர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஒரு ரசாயன தொழில் அமைப்பின் முயற்சிகளை அங்கீகரித்து கௌரவித்து இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஓபிசிடபிள்யூ தலைமை இயக்குநர் திரு பெர்னாண்டோ அரியாஸும் ஹேக் நகர மேயர் திரு ஜான் வான் ஜானென்னும் இந்த விருதை வழங்கினர்.

இந்திய வேதியியல் கவுன்சில் சார்பில், அதன் தலைமை இயக்குநர் டி.சோதி செல்வம் இந்த விருதை பெற்றுக்கொண்டார். விருது வழங்கும் விழாவில் ஓபிசிடபிள்யூ-க்கான இந்தியாவின் தூதர், நிரந்தர பிரதிநிதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓபிசிடபிள்யூ என்பது ரசாயன ஆயுதங்கள் தடை தொடர்பான  செயல்பாடுகளை மையமாகக் கொண்ட  அமைப்பாகும். இது ரசாயன ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடையும் நோக்கத்துடன் செயல்படுகிறது. 1997இல் நடைமுறைக்கு வந்த ரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்ட நாடாக இந்தியா உள்ளது. என்ஏசிடபிள்யூ என்பது இந்தியாவில் உடன்படிக்கையை செயல்படுத்தும் தேசிய அதிகார அமைப்பாகும்.

2013-ம் ஆண்டில், ரசாயன ஆயுதங்களை ஒழிக்கும் விரிவான முயற்சிகளுக்காக ஓபிசிடபிள்யூ-க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த சாதனையின் மரபைப் பாதுகாக்க, ஓபிசிடபிள்யூ 2014-ல் ஹேக் நகராட்சியுடன் இணைந்து ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருதை’ நிறுவியது.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

सोनू त्यागी ने डिजिटल प्लेटफॉर्म्स पर बढ़ती अश्लीलता की निंदा की, नैतिक और आध्यात्मिक मूल्यों को बढ़ावा देने की अपील

मुंबई – प्रसिद्ध फिल्म निर्माता, आध्यात्मिक विचारक और अप्रोच एंटरटेनमेंट एवं गो स्पिरिचुअल के संस्थापक …

News Hub