बुधवार, अक्तूबर 30 2024 | 06:52:03 PM
Breaking News
Home / Choose Language / tamil / புதுக்கோட்டையில் உள்ள நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ஹால்மார்க் நகைகளை பிஐஎஸ் பறிமுதல் செய்தது

புதுக்கோட்டையில் உள்ள நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ஹால்மார்க் நகைகளை பிஐஎஸ் பறிமுதல் செய்தது

Follow us on:

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), மதுரைக்கிளை 29.10.2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு 1643.36 கிராம் போலி தங்க நகைகளை பறிமுதல் செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​பாலாஜி ஜூவல்லரி என்ற நகைக் கடையில் பிஐஎஸ் சின்னம் பொறிக்கப்பட்டு போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட, ஹால்மார்க் தனித்துவ அடையாள இலக்கம் இல்லாமல் 1643.36 கிராம் எடை கொண்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பிஐஎஸ் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்திய தர நிர்ணய சட்டம், 2016ன் படி, மேற்கூறிய நகைக்கடைக்காரர் மீது குற்றவியல் புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது முதல் மீறலுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும், மேலும் நீதிமன்ற உத்தரவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது விற்கப்படும் பொருட்கள் அல்லது பொருட்களின் மதிப்பை விட ஐந்து மடங்கு வரை அபராதமும் வழங்கப்படும்.

உற்பத்தியாளர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் போலிப்பொருட்களை விநியோகிப்பதைத் தடுக்கவும், தவறான பாதையில் பொதுமக்களை வழிநடத்துவதைத் தவிர்க்கவும், இந்திய தரநிர்ணய அமைவனம் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவதற்கு முன், பிஐஎஸ் கேர் செயலி மூலம் உரிமத்தின் நிலையை உறுதி செய்து கொள்ளலாம். உரிமம் இடைநிறுத்தப்பட்டது / ஒத்திவைக்கப்பட்டது / காலாவதியானது / ரத்து செய்யப்பட்டது என கண்டறியப்பட்டால், நுகர்வோர் புகாரைப் பதிவுசெய்யலாம். பிஐஎஸ் தரநிலைமுத்திரை (ISI MARK, பிஐஎஸ் பதிவு முத்திரை, பிஐஎஸ் ஹால்மார்க் 22K916 XXXXXX, பிஐஎஸ் மேலாண்மை அமைப்புகளின் சான்றிதழ்கள்) ஆகியவற்றின் தவறான பயன்பாடு பற்றிய தகவல்களை, மின்னஞ்சல் / கடிதம் / பிஐஎஸ் கேர்  செயலி (கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இதிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்) மூலம் அமைவனத்திற்கு தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ரயில்வே வளாகங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை ரயில்வேயும், பெண்கள் – குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் வெளியிட்டுள்ளன

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான முயற்சிகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்காது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே வளாகங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மைல்கல் முயற்சியாக, ரயில்வே பாதுகாப்புப் படை, பெண்கள் – குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, புதுப்பிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP -எஸ்ஓபி) 25.10.2024 அன்று புதுதில்லியில் உள்ள ரயில் பவனில் வெளியிட்டது. இதனை வெளியிட்டுத் தொடங்கி வைத்த மத்திய மகளிர் – குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் மாலிக், மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சிறார்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான  ரயில்வேயின் முன்முயற்சிகளைப் பாராட்டினார். ஒவ்வொரு நாளும் 2.3 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்றும் இதில் 30 சதவீதம் பெண்கள் எனவும் அவர் தெரிவித்தார். அவர்களில் பலர் தனியாக பயணம் செய்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கடத்தல்காரர்களால் கடத்தப்படும் அபாயத்தில் உள்ள சிறார்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் (RPF), மனிதக் கடத்தல் எதிர்ப்பு பிரிவுகளை (AHTUs) வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மகளிர்- குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடத்தலில் இருந்து 57,564 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. அவர்களில் பெண்கள் 18,172 பேர். மேலும், இந்த குழந்தைகளில் 80 சதவீதம் பேர் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவதை படை உறுதி செய்துள்ளது. ‘ஆபரேஷன் நன்ஹே ஃபரிஷ்டே’ திட்டத்தின் கீழ், ரயில்வே கட்டமைப்பு முழுவதும் குழந்தைகளைப் பாதுகாக்க ஆர்பிஎஃப் தொடர்ச்சியான கவனம் செலுத்துகிறது. ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவ் கூறுகையில், ரயில்வே வளாகத்தில் குழந்தைகளைப் பாதுகாத்து, சிறார் நீதி சட்டத்தின்படி பணியாற்றுவதாகக் கூறினார். ரயில்வே வாரியத்தின் தலைவர் திரு சதீஷ் குமார் உட்பட இரு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.