शनिवार, नवंबर 30 2024 | 09:44:35 AM
Breaking News
Home / Choose Language / Tamil / 2024 அக்டோபர் மாதத்திற்கான, முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீடு (அடிப்படை: 2011-12=100)

2024 அக்டோபர் மாதத்திற்கான, முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீடு (அடிப்படை: 2011-12=100)

Follow us on:

எட்டு முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 2023 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 2024 அக்டோபரில் 3.1 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. சிமெண்ட், சுத்திகரிப்பு பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 செப்டம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த, தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை தொழில்துறை குறியீட்டு எண் அளவிடுகிறது.

2024 ஜூலை மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.

நிலக்கரி – நிலக்கரி உற்பத்தி (எடை: 10.33 சதவீதம்) 2023  அக்டோபரை  விட 2024 அக்டோபரில் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் – கச்சா எண்ணெய் உற்பத்தி (எடை: 8.98 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 4.8 சதவீதம் குறைந்துள்ளது.

இயற்கை எரிவாயு – இயற்கை எரிவாயு உற்பத்தி (எடை: 6.88 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 1.2 சதவீதம் குறைந்துள்ளது.

பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் – பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி (எடை: 28.04 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

உரங்கள் – உர உற்பத்தி (எடை: 2.63 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஃகு – எஃகு உற்பத்தி (எடை: 17.92 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிமெண்ட் – சிமெண்ட் உற்பத்தி (எடை: 5.37 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மின்சாரம் – மின்சார உற்பத்தி (எடை: 19.85 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 0.6 சதவீதம் குறைந்துள்ளது.

2024 நவம்பர் மாதத்திற்கான குறியீட்டு எண் 2024 டிசம்பர் 31 அன்று வெளியிடப்படும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

யூ வின் போர்ட்டல் குறித்த அண்மைத் தகவல்

யூ வின் என்பது தடுக்கக்கூடிய 12 நோய்களுக்கு எதிராக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு (பிறப்பு முதல் 16 வயது வரை) உயிர்காக்கும் தடுப்பூசிகளை சரியான …