இந்திய குடியரசு மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், நாடு தழுவிய, ஒரு வருட கால ‘எங்களது அரசியலமைப்புச் சட்டம், எங்களது கௌரவம்’ எனப்படும் இயக்கத்தை நீதித்துறை செயல்படுத்துகிறது. இந்த இயக்கத்தை இந்திய குடியரசு துணைத்தலைவர் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி தொடங்கி வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கொள்கைகளுக்கான ஒட்டுமொத்த கடப்பாட்டை உறுதி செய்வதோடு நம் நாட்டை ஒருங்கிணைக்கும் பகிரப்பட்ட விழுமியங்களைக் கொண்டாடுவது இயக்கத்தின் நோக்கமாகும்.
‘எங்களது அரசியலமைப்புச் சட்டம், எங்களது கௌரவம்’ (ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்) என்ற இணையதளம் சென்ற ஜூலை மாதம் 16-ம் தேதியன்று பிரயாக்ராஜில் நடைபெற்ற 2-வது பிராந்திய நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டம், மற்றும் தங்களது சட்ட உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான தகவல்களின் இருப்பிடமாக உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே மேம்படுத்துவதே எங்களது அரசியலமைப்புச் சட்டம், எங்களது கௌரவம் என்ற இணையதளத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நாடு தழுவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக 3 இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவை முறையே அனைவருக்குமான சம்கோ நியாய ஹர் கர் நியாய, நவ்பாரத் நவ் சங்கல்ப் மற்றும் விதி ஜாகீரிதி அபியான் ஆகும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜூன் ராம் மெஹ்வால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்