மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, சிறப்பு இயக்கம் 4.0-ன் ஒரு பகுதியாக அதன் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தலைமையிலான அரசின் முன்முயற்சியாகும். இந்த இயக்கம் 2024, அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்றது. அலுவலக தூய்மை, பயனுள்ள இட மேலாண்மை, முக்கிய பிரமுகர்கள், முன்னுரிமை குறிப்புகளை விரைவாகக் கையாளுதல் ஆகியவற்றில் முதன்மை கவனம் செலுத்தியது.
சிறப்பு இயக்கம் 4.0, மீன்வளத் துறை தலைமை அலுவலகங்கள் உட்பட கள அலுவலகங்களில் நடைபெற்றது. இந்திய மீன்வள ஆய்வு நிறுவனம், மீன்வளத்திற்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனம், தேசிய மீன்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், மத்திய மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் போன்றவை இந்த இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றன. நிலுவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 23 குறிப்புகள், 10 மாநிலங்களின் குறிப்புகளுக்கு தூய்மை சிறப்பு இயக்கத்தின் போது இத்துறையால் வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டது. 3302 நேரடி கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதில், 1901 கோப்புகள் கழிக்கப்பட்டன.