2024, அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு இயக்கம் 4.0 ஐ மின்சார அமைச்சகம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சிறப்பு இயக்கம் தூய்மையை ஊக்குவித்தல், பணிகளை ஒழுங்குபடுத்துதல், அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளில் நிலுவையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இந்த இயக்கத்தின் போது, அமைச்சகம் பல்வேறு இடங்களில் 368 தூய்மை இயக்கங்களை (100%) நிறைவு செய்தது. தூய்மைப் பணி காரணமாக 1,26,910 சதுர அடி பகுதி காலியாக்கப்பட்டது. பழைய பொருட்கள் மற்றும் மின்னணு கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ.50,41,02,605 (நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அதிகம்) வருவாய் ஈட்டப்பட்டது.
ஆவண மேலாண்மையைப் பொறுத்தவரை, அமைச்சகம் 25,957 நேரடி கோப்புகளை (99%) மதிப்பாய்வு செய்ததில் 20,573 கோப்புகளை அப்புறப்படுத்தியது. மேலும், 2,583 மின்- கோப்புகளை (100%) மதிப்பாய்வு செய்து அவற்றில் 1,826 கோப்புகள் அகற்றப்பட்டன.
72 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்புகளில் 62 குறிப்புகளுக்கும், 11 நாடாளுமன்ற உத்தரவாதங்களில் 10 உத்தரவாதங்களுக்கும், 54 மாநில அரசு குறிப்புகளில் 45 குறிப்புகளுக்கும் தீர்வு காணப்பட்டது. 218 பொதுமக்கள் குறைகள் (97%) மற்றும் 36 பொதுமக்கள் குறை மேல்முறையீடுகள் (100%) திறம்பட தீர்வு காணப்பட்டது .