गुरुवार, नवंबर 14 2024 | 10:16:57 AM
Breaking News
Home / Choose Language / Tamil / மருந்துகள் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது

மருந்துகள் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது

Follow us on:

2024, அக்டோபர் 2  முதல் 31  வரை அரசின் சிறப்பு இயக்கம்  4.0-ல் மருந்துகள் துறை தீவிரமாக பங்கேற்றது. துறையின் அமைப்புகளான தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்; அகமதாபாத், எஸ்.ஏ.எஸ் நகர், ரேபரேலி, ஹாஜிப்பூர், கொல்கத்தா, குவஹாத்தி, ஹைதராபாத் ஆகிய இடங்களில்  உள்ள தேசிய மருந்துக்  கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்; இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம்; கொல்கத்தாவில் உள்ள பெங்கால் வேதிப்பொருள்கள் மற்றும் மருந்து நிறுவனம் ; புனேயில் உள்ள இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் மற்றும் பெங்களூரில் உள்ள கர்நாடகா ஆன்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகிய வற்றில் இந்த இயக்கம் நடைபெற்றது.

பிரச்சாரத்தின் ஆயத்த கட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் சிலவற்றை இத்துறை  வெற்றிகரமாக அடைய முடிந்தது. சிலவற்றில் இலக்கை விஞ்சியது.

நிலுவையில் உள்ள எம்.பி குறிப்புகள், மாநில அரசு குறிப்புகள் 100% பைசல் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 30 வரை நிலுவையில் இருந்த 21 பொதுமக்கள் குறை தீர்க்கும் மேல்முறையீடுகளுக்கும், 25 பொது மக்கள் குறை தீர்க்கும் மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. பிரதமர் அலுவலகக் குறிப்பு இந்திய மருத்துவக் கெளன்சில் குறிப்பு ஆகியவற்றில் நிலுவை இல்லை.

நாடு முழுவதும் 11,046 துப்புரவு மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் அக்டோபர் 31 வரை 11,127 இடங்களை சுத்தம் செய்ததன் மூலம் இத்துறை இலக்கை விஞ்சியது. இதில்  இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகத்தின் முன்முயற்சியுடனும் நெருக்கமான ஆதரவுடனும் சுத்தம் செய்யப்பட்ட 11,000 மக்கள் மருந்தக மையங்களும் அடங்கும். இது அனைவரிடமும் தூய்மையான, சுகாதாரமான சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியது

சிறப்பு இயக்கத்தின் போது 5667 நேரடிக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 1544 கோப்புகள் நீக்கப்பட்டன. மின்னணு சுத்தம் முறையின் கீழ், 4671 ‘தொகுக்கப்பட்ட’ மின்-கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, எதிர்கால தேவைக்காக அவற்றைத் தக்கவைக்க முடிவெடுக்கப்பட்டது. 26 மின் கோப்புகள் மூடப்பட்டன. இந்த இயக்கத்தின் போது கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ.42,673 வருவாய் ஈட்டப்பட்டது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர்

இகாஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு  மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்த்து …