இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) ஆகியவை, 7-வது வருடாந்திர உயர்மட்டக் கூட்டத்தை 2024 நவம்பர் 11 அன்று கொழும்பில் நடத்தின. தலைமை இயக்குநர் டி.ஜி.எஸ்.பரமேஷ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட ஐ.சி.ஜி தூதுக்குழு மற்றும் ரியர் அட்மிரல் ஒய்.ஆர்.சேரசிங்க தலைமையிலான இலங்கை கடலோர காவல்படை தூதுக்குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இது, இரு நாட்டு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
போதைப்பொருள் கடத்தல், கடல் மாசுபாடு, மாலுமிகளின் பாதுகாப்பு, சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது, திறன் வளர்ப்பு திட்டங்கள் மற்றும் பிற கூட்டு ஏற்பாடுகள் உள்ளிட்ட பிராந்திய கடல்சார் சமகால பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில், கடல்சார் சவால்களை கூட்டாக எதிர்கொள்வதற்கான இரு நாட்டு கடலோர காவல்படைகளின் உறுதிப்பாட்டை இந்த கூட்டம் சுட்டிக் காட்டுகிறது. இந்த சவால்களை எதிர்கொள்வதில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தி, அதன் மூலம் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது..
2018 மே மாதம் இரு நாட்டு கடல்சார் முகமைகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நிறுவனமயமாக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றி இந்த வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. 2025-ம் ஆண்டில் கூட்டத்தின் 8-வது பதிப்பை ஐ.சி.ஜி நடத்தும்.