रविवार, नवंबर 17 2024 | 03:06:54 PM
Breaking News
Home / Choose Language / Tamil / இந்திய கடற்படைக்காக யுனிகார்ன் கம்பம் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பான் அரசுடன் கையெழுத்தானது

இந்திய கடற்படைக்காக யுனிகார்ன் கம்பம் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பான் அரசுடன் கையெழுத்தானது

Follow us on:

டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே இந்திய கடற்படையின் கப்பல்களில் பொருத்துவதற்காக யுனிகார்ன் கம்பத்தை இணைந்து உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நவம்பர் 15, 24 அன்று கையெழுத்தானது.

டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான இந்தியத் தூதர்  திரு. சிபி ஜார்ஜ் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கையகப்படுத்தல் தொழில்நுட்பம் மற்றும் தளவாட முகமையின் ஆணையர் திரு. இஷிகாவா தகேஷி ஆகியோர் டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.

ஒருங்கிணைந்த சிக்கலான ரேடியோ ஆண்டெனா (யூனிகார்ன்) என்பது ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு அமைப்புகளைக் கொண்ட ஒரு கம்பமாகும், இது கடற்படை கப்பல்களை  மேம்படுத்த உதவும்.

இந்த மேம்பட்ட அமைப்புகளைச் சேர்ப்பதை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது, இது ஜப்பானிய ஒத்துழைப்புடன் இந்தியாவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கும்.

இது செயல்படுத்தப்படும்போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பாதுகாப்பு உபகரணங்களின் கூட்டு மேம்பாடு / கூட்டு உற்பத்தி நிகழ்வாக இது இருக்கும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிபிடிடி தொடங்கியுள்ளது

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வரி செலுத்துவோருக்கு வெளிநாட்டு சொத்துக்களை துல்லியமாக பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து வரும் …