பொதுமக்கள் குறைகளை பயனுள்ள முறையிலும், சரியான நேரத்தில் மற்றும் அர்த்தமுள்ள முறையிலும் தீர்ப்பதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் தங்கள் குறை தீர்க்கும் முறைகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற அவரது உத்தரவை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 18 நவம்பர் 2024 அன்று “பொது குறைகளை திறம்பட தீர்த்தல்” குறித்த தேசிய பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்தப் பயிலரங்கில், பிரதமரின் வழிகாட்டுதலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பொறுப்பான ஆளுகை மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு வழிமுறைகளில் குடிமக்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும்.
பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான மாநில அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை விருந்தினராக பங்கேற்று, முக்கிய உரையாற்றுவார் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கான முக்கிய முயற்சிகளைத் தொடங்குவார். இந்த முயற்சிகளில் பின்வருவன அடங்கும்:
·குறை தீர்க்கும் மதிப்பீடு மற்றும் குறியீடு (GRAI) 2023,
·CPGRAMS மொபைல் ஆப் 2.0, மற்றும்
இந்த பயிலரங்கில் 5 அமர்வுகள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள் / துறைகளின் மூத்த அதிகாரிகளின் 22 விளக்கக்காட்சிகள் இடம்பெறும்.
இந்த முழுமையான அமர்வில், துறையின் செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர் திருமதி வந்தனா குர்னானி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.