शुक्रवार, नवंबर 22 2024 | 10:12:53 AM
Breaking News
Home / Choose Language / Tamil / தென் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்த இடைக்கால ஆய்வை வேளாண் அமைச்சகம் நடத்தியது

தென் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்த இடைக்கால ஆய்வை வேளாண் அமைச்சகம் நடத்தியது

Follow us on:

தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து இடைக்கால ஆய்வு செய்வதற்காக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை  நவம்பர் 18,19 ஆகிய நாட்களில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் மண்டல மாநாட்டை நடத்தியது. துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு  இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்தனர். திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதித்தனர். வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவளித்தல், ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகள், இலக்கிற்கான முயற்சிகள், நாடு முழுவதும் நீடித்த வேளாண் வளர்ச்சி  ஆகியவற்றில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த மாநாடு பிரதிபலித்தது.

அப்போது பேசிய டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, அண்மைக்கால ஆண்டுகளில் அமைச்சகம் எடுத்த முக்கிய முன்முயற்சிகளை எடுத்துரைத்தார். மேலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு திட்டம் மற்றும் பல்வேறு முயற்சிகளின் அதிகபட்ச பலன்களை மாநிலங்கள் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண் பட்ஜெட் தொகை  அதிகரிப்பு ,விவசாயிகளுக்கு உகந்த வகையில் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு இடையூறுகள், கையாளப்படும் சிறந்த நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் பங்கேற்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

2024 நவம்பர் 19 அன்று இந்தப் பிரதிநிதிகள் இயற்கை வேளாண் நிலங்களைப் பார்வையிட்டு, 2 முதல் 8 ஆண்டுகள் கள அனுபவம் கொண்ட பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினர். மேலும் பல்வேறு ஜீவாம்ருதம் மற்றும் வேளாண் ட்ரோன் தெளிக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தயாரிப்பைப் பார்வையிட்டனர்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது …