सोमवार, नवंबर 25 2024 | 11:21:02 AM
Breaking News
Home / Choose Language / Tamil / தேசிய இளைஞர் விழா 2025- வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்

தேசிய இளைஞர் விழா 2025- வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்

Follow us on:

வளர்ந்த இந்தியா பற்றிய கருத்துக்களைப் பிரதமருடன் பகிர்ந்து கொள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா, 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 5 வரை மை பாரத் தளத்தில் நடைபெறுகிறது.

தேசிய இளைஞர் விழா 2025-ன் ஒரு பகுதியாக  நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ம் ஆண்டு ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் புது தில்லியில் நடைபெறவுள்ளது.

இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக இருக்கும். வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் நேரடியாக உரையாடவும், இந்தியாவின் எதிர்காலம் குறித்த தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கும்.

 பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்தது போல் இளம் தலைவர்களை அரசியலுக்கு கொண்டு வருவது இதன் நோக்கமாகும். இது ஒரு வெளிப்படையான, ஜனநாயக மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்தல் மூலம் வளர்ந்த இந்தியாவிற்கு இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வளர்ந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தகுதியுள்ள அனைத்து இளம் பெண்களும் ஆண்களும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்கலாம். மேரா யுவ பாரத் (மை பாரத்) தளத்தில் 25 நவம்பர் 2024 மற்றும் டிசம்பர் 5, 2024 க்கு இடையில் நடத்தப்படும் டிஜிட்டல் வினாடி வினாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் பங்கேற்பதன் மூலம் அடுத்த கட்டங்களுக்குத் தகுதி பெறலாம்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை MyBharat தளத்திலிருந்தும் (https://mybharat.gov.in/) இந்திய விளையாட்டு ஆணையம், நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலகங்களிலிருந்தும் பெறலாம்.

தேசிய இளையோர் திருவிழாவின் மறுவடிவமைப்பான வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க நான்கு கட்டங்களாக வளர்ச்சியடைந்த பாரதம் சவாலை முன்வைக்கிறது.

கட்டம் 1: வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா: நவம்பர் 25, 2024 முதல் டிசம்பர் 5, 2024 வரை, டிஜிட்டல் வினாடி வினா 15 – 29 வயதுடையவர்களுக்கான எனது இளைய பாரதம் (மை பாரத்) தளத்தில் பங்கேற்க வேண்டும்.

கட்டம் 2: டிசம்பர் 08 2024 முதல் டிசம்பர் 15 2024 வரை, கட்டுரை/ வலைப்பதிவு (Blog) எழுதுதல் : முந்தைய சுற்றில் வெற்றி பெற்றவர்கள், “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்பம்” மற்றும் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்” போன்ற சுமார் 10 யோசனைகள் பற்றிய கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இந்தப் போட்டியும் MyBharat தளத்தில் நடத்தப்படும்.

கட்டம் 3: டிசம்பர் 20 2024 முதல் டிசம்பர் 26 2024 வரை, வளர்ச்சியடைந்த பாரதம் விஷன் பிட்ச் டெக்: மாநில அளவிலான விளக்கக்காட்சிகள்: இரண்டாம் சுற்றில் தகுதி பெறும் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மாநில அளவில் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள்.

கட்டம் 4:  புதுதில்லியில் நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதம் தேசிய சாம்பியன்ஷிப்: 2025 ஜனவரி 11 முதல் 12 வரை நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் மாநில அளவிலான அணிகள் போட்டியிடும். வெற்றிபெறும் அணிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியிடம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தங்களின் தொலைநோக்குப் பார்வைகளையும் யோசனைகளையும் முன்வைக்கும்.

வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025, மூன்று வெவ்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களின் கூட்டம் நடைபெறும். 2025 ஜனவரி 11-12 தேதிகளில் தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் தேசிய நிகழ்வில் பங்கேற்க சுமார் 3,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வளர்ச்சியடைந்த பாரதம் கண்காட்சி: இது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் இளைஞர்கள் சார்ந்த முன்முயற்சிகளைக் காட்சிப்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சிப் பார்வையில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு இது ஒரு சிறந்த தளத்தை வழங்கும்

முழு அமர்வுகள்: முன்னணி தேசிய மற்றும் உலகளாவிய வல்லுநர்கள் இளைஞர்களுடன்  கருத்துரையாடல் மற்றும் பயிற்சி பட்டறைகளில் பங்கேற்பார்கள்.

இந்திய பாரம்பரியத்தின் கொண்டாட்டம்: பாரம்பரியத்தின் பெருமையை காக்கும் வகையில் வளர்ச்சி எனும் மகத்தான பகுதியாக இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை கொண்டாடும் கலாச்சார நிகழ்ச்சியும் இந்த விழாவில் அடங்கும்.

வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் என்பது ஒரு திருவிழா என்பதை விட, இது இந்தியாவின் இளைஞர்களை நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் தீவிர பங்களிப்பாளர்களாக மாற்றும் இயக்கமாகும்.

வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் தொடர்பான அனைத்து விவரங்களும் மை பாரத் தளத்தில் (https://mybharat.gov.in/) கிடைக்கிறது.

  

  

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

தேசபக்தர், தொலைநோக்குத் தலைவர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி

1901-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, தேசபக்தர், கல்வியாளர், நாடாளுமன்றவாதி, அரசியல்வாதி  மனிதாபிமானம் கொண்ட பன்முக ஆளுமை என பன்முக அடையாளங்களுடன் திகழ்ந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமாக திகழ்ந்த அசுதோஷ் முகர்ஜி அவரது தந்தை ஆவார். அவரது தந்தையிடம் இருந்து தேசியவாதத்தின் மரபைப் பெற்றார். இந்த வளர்ப்பு அவருக்கு இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த மரியாதையையும் நவீன விஞ்ஞான சிந்தனையில் தீவிர ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. டாக்டர் முகர்ஜியின் கல்வித் திறமை சிறு வயதிலிருந்தே வெளிப்பட்டது. பிரசிடென்சி கல்லூரியில் சிறந்து விளங்கிய பிறகு, டிலிட் உட்பட சட்டம், இலக்கியத்தில் பட்டம் பெற்றார். இங்கிலாந்தில் இருந்தபோது, ​​டாக்டர் சியாமா பிரசாத், பிரிட்டிஷ் பேரரசின் பல்கலைக்கழகங்களின் மாநாட்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஒரு முக்கிய இந்திய கல்வியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.  இந்திய மொழிகளை ஊக்குவிப்பதிலும், அறிவுசார் வளர்ச்சியை வளர்ப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். ரவீந்திரநாத் தாகூர் போன்ற பிரபலங்களை மாணவர்களை ஊக்குவிக்க அழைத்தார். பின்னர் அவர் இந்து மகாசபையில் சேர்ந்தார். 1943-ம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தின் போது அவரது மனிதாபிமான முயற்சிகள், நிவாரண முயற்சிகள், சமூகத்திற்கு சேவை செய்வதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. சுதந்திரத்திற்குப் பின், டாக்டர் முகர்ஜி, ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராக அவர் பணியாற்றினார். சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஃபேக்டரி, சிந்திரி உரக் கார்ப்பரேஷன் நிறுவனங்களை நிறுவியதன் மூலம் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். இருப்பினும், கருத்தியல் வேறுபாடுகள் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்தது. அதன் பிறகு அவர் தேசியவாத கொள்கைகளை வென்றெடுக்க அகில இந்திய பாரதிய ஜன சங்கத்தை (1951) அவர் நிறுவினார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், வல்லமைமிக்க பேச்சாளராகவும், மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவராகவும் டாக்டர் முகர்ஜி இருந்தார். காஷ்மீர் பிரச்சினை, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மக்களின் இடப்பெயர்வு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, போன்ற பிரச்சினைகளில் அவரது கடுமையான விவாதங்களுக்காக “நாடாளுமன்றத்தின் சிங்கம்” என்ற பட்டத்தைப் பெற்றார். இந்திய ஒற்றுமைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை ஜம்மு – காஷ்மீர் ஒருங்கிணைப்புக்கான அவரது போராட்டம் எடுத்துக்காட்டியது. “நான் உங்களுக்கு இந்திய அரசியலமைப்பைப் பெற்றுத் தருவேன் அல்லது அதற்காக என் உயிரைக் கொடுப்பேன்” என்ற அவரது பிரகடனம், அவரது அர்ப்பணிப்பைப் பறைசாற்றியது. அவர் காஷ்மீரில் காவலில் இருந்தபோது 1953-ல் இறந்தார். இந்த இழப்பு நாடு முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியது. தேசபக்திக்கும், தன்னலமற்ற சேவைக்கும் அடையாளமாக, சியாமா பிரசாத் முகர்ஜி திகழ்கிறார்.