புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ஆயுஷ் அரங்கை மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) இன்று பார்வையிட்டார்.
அப்போது, திரு ஜாதவ் கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். ஆயுஷ் மருத்துவ முறைகள் மற்றும் வாழ்க்கை முறை தீர்வுகளை மேம்படுத்துவதில் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். முழுமையான ஆரோக்கியம் மற்றும் நீடித்த சுகாதாரப் பராமரிப்பை அடைவதற்கு பாரம்பரிய அறிவை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் வளர்ந்து வரும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் துறைக்கு உலகளாவிய பங்குதாரர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மைல்கல் முயற்சியான ‘ஆயுஷ் விசா’ என்பது கண்காட்சி அரங்கில் உள்ள முக்கிய ஈர்ப்பான அம்சங்களில் முக்கியமானதாகும்.உள்துறை அமைச்சகத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆயுஷ் விசா, ஆயுஷ் அமைப்புகளின் கீழ் சிகிச்சைகளுக்கான சர்வதேச மருத்துவ சுற்றுலாவை எளிதாக்குகிறது. இது ஆரோக்கிய சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கி நிலைநிறுத்தும்.
புதுமையான சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய அணுகுமுறைகளை நோக்கிய முக்கிய முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதில் அரங்கின் முயற்சிகளை திரு பிரதாப்ராவ் ஜாதவ் பாராட்டினார்.
நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து கொண்டாடுகிறது.