துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் சில்லறை விலைகள் குறைந்து கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்துடன் (ஆர்ஏஐ) வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகிறது. சில்லறை விற்பனையாளர்கள், நியாயமான விலையை பராமரிப்பதை உறுதி செய்வதற்காக பருப்பு வகைகளின் மண்டி விலை, சில்லறை விலை ஆகியவற்றின் போக்குகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில்லறை சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் வகையில், …
Read More »2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்கள், முறைப்படுத்தாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது
2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் முறைப்படுத்தப்படாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி 63.28 மில்லியன் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70.18 மில்லியன் டன்னாக இருந்தது. அதாவது நிலக்கரி இறக்குமதி 9.83% குறைந்துள்ளது. இதே போல் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 8.59% குறைந்தது. அதாவது 10.71 மில்லியன் டன்னிலிருந்து 9.79 மில்லியன் டன்னாக குறைந்தது. இந்தத் துறைகள் உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை சார்ந்திருப்பது அதிகமாகி உள்ளதை இது காட்டுகிறது. இருப்பினும், எஃகு தொழிற்சாலைக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியும், இறக்குமதி …
Read More »இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நேரடியாக செலவு செய்வது குறைந்துள்ளது
2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார கணக்குகள் தரவு ஒரு நேர்மறையான போக்கை வெளிப்படுத்துகிறது. மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து நேரடியாகச் செய்யும் செலவு பெருமளவுக்கு குறைந்துள்ளது. பெரும்பாலும் அதிகரித்த அரசாங்க முதலீடு மற்றும் மேம்பட்ட பொது சுகாதார கட்டமைப்பின் காரணமாக, 2014-15 மற்றும் 2021-22 க்கு இடையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதார செலவினம் 1.13% முதல் 1.84% வரை உயர்ந்தது. கூடுதலாக, ஒட்டுமொத்த அரசு செலவினங்களில் இதன் பங்கு 3.94% இலிருந்து 6.12% ஆக உயர்ந்தது. இது பொது சுகாதாரத்திற்கான வலுவான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அதே காலகட்டத்தில், தனிநபர் சுகாதார செலவினம் ரூ 1,108 இலிருந்து ரூ3,169 ஆக மூன்று மடங்காக உயர்ந்தது. இந்த அதிகரிப்பு பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசை அனுமதிக்கிறது, சேவைகளை மிகவும் மலிவாகவும் மற்றும் பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. இது பெருந்தொற்று காலத்தில் அரசின் நடவடிக்கையால், இந்த மாற்றம் மேலும் வலியுறுத்தப்பட்டது, அங்கு முதலீடுகள் உடனடி சுகாதாரத் தேவைகள் மற்றும் தொற்றா நோய்களின் (என்.சி.டி) எழுச்சி போன்ற நீண்டகால சுகாதார சவால்கள் இரண்டையும் இலக்காகக் கொண்டிருந்தன.
Read More »