सोमवार, दिसंबर 23 2024 | 02:17:51 PM
Breaking News
Home / Tag Archives: Indian institution

Tag Archives: Indian institution

‘க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025’-ல் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துப் பிரகாசிக்கிறது – முதல் 100 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன

க்யூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025 என்பது ஆசிய கண்டம் முழுவதும் உள்ள உயர்கல்வியின் திறனைப் பிரதிபலிக்கிறது. கல்வி, ஆராய்ச்சி, புதுமை, சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சிறந்த நிறுவனங்களை இது பட்டியலிடுகிறது. இந்த ஆண்டு தரவரிசை ஆசிய பல்கலைக்கழகங்களிடையே வளர்ந்து வரும் போட்டியையும் உலகளாவிய கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கான பிராந்தியத்தின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. க்யூஎஸ் உலக  தரவரிசை – ஆசியா 2025-ன் முதல் 50  முதல் இடங்களுக்குள் இந்தியாவின் 2 நிறுவனங்களும், முதல் 100 இடங்களில் முதல் இந்தியா ஏழு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.  தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனம்  44வது இடத்தில் உள்ளது. பெட்ரோலியம் – எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் (யுபிஇஎஸ்) இந்திய நிறுவனங்களிடையே மிக முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இது 70 இடங்கள் முன்னேறி 148 வது இடத்தைப் பிடித்துள்ளது. க்யூஎஸ் உலக பல்கலைக்கழக ஆசிய தரவரிசையின் முக்கிய அம்சங்கள்: இந்த தரவரிசை கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 25 நாடுகளை உள்ளடக்கிய 984 நிறுவனங்களை மதிப்பிடுகிறது. ‘க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025’  என்பது, நிறுவன செயல்திறன் குறித்து செயல்திறன் ஒப்பீடுகளைச் செய்கிறது. சமீபத்திய தரவரிசையில் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுடன் இந்தியா தனித்து நிற்கிறது. முதல் 50-ல் இடம்பெற்ற நிறுவனங்கள்: இந்தியாவில் ஐஐடி தில்லி (44வது இடம்) மற்றும் ஐஐடி மும்பை (48வது இடம்) இது தவிர  ஐஐடி – சென்னை (56), ஐஐடி காரக்பூர் (60), இந்திய அறிவியல் நிறுவனம் (62), ஐஐடி கான்பூர் (67), தில்லி பல்கலைக்கழகம் (81) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் வலுவான கல்வி நிலையை வெளிப்படுத்துகின்றன.

Read More »