सोमवार, दिसंबर 23 2024 | 09:39:43 AM
Breaking News
Home / Tag Archives: inspects

Tag Archives: inspects

கான்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (02 நவம்பர் 2024), உத்தரப்பிரதேசத்தில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் இந்தியா லிமிடெட் (AWEIL) நிறுவனத்தின் பிரிவான கான்பூரில் உள்ள கள துப்பாக்கித் (ஃபீல்ட் கன்) தொழிற்சாலைக்குச் சென்றார்.  இது டேங்க் டி -90, தனுஷ் கன் உள்ளிட்ட பல்வேறு பீரங்கி துப்பாக்கிகள், டாங்கிகளின் பீப்பாய் போன்றவை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். இந்தப் பயணத்தின்போது, வெப்ப சுத்திகரிப்பு, தொழிற்சாலையின் புதிய பகுதி உள்ளிட்ட முக்கிய வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் ஆகியோரும் சென்றனர்.  கான்பூரில் உள்ள பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களான (டிபிஎஸ்யூ) – ஏவெய்ல், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் இந்தியா லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் கான்பூரில் அமைந்துள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தின் அதிகாரிகள் திரு ராஜ்நாத் சிங்கிடம் விளக்கங்களை அளித்தனர். அமைச்சரின் இந்த ஆய்வின் போது, இந்த நிறுவனங்களின் உற்பத்தி விவரம், தற்போதைய முக்கிய திட்டங்கள், ஆராய்ச்சி – மேம்பாட்டு முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. ஏடபிள்யூஇஐஎல் (AWEIL) சிறிய, நடுத்தர, பெரிய காலிபர் துப்பாக்கி அமைப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

Read More »