गुरुवार, दिसंबर 19 2024 | 05:29:30 PM
Breaking News
Home / Tag Archives: Philip Green

Tag Archives: Philip Green

ஆஸ்திரேலிய தூதர் திரு. பிலிப் கிரீன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியுடன் சந்திப்பு

ஆஸ்திரேலிய தூதர் திரு. பிலிப் கிரீன், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்த சந்திப்பு  முக்கியமான பொதுத்தளமாக அமைந்தது. இந்த சந்திப்பின் போது, டாக்டர் சதுர்வேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நீண்டகால மற்றும் பன்முக கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். விவசாயத்தில் இந்தியாவின் தற்போதைய முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டிய அவர், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும், மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். பயிர் பன்முகப்படுத்தல், ஏற்றுமதியை ஊக்குவித்தல், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைதல் மற்றும் இந்தியாவின் வேளாண் உத்தியின் முக்கிய கூறுகளாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கியமான முயற்சிகளை டாக்டர் சதுர்வேதி எடுத்துரைத்தார். இந்தத் துறையை நவீனமயமாக்குவதில் துல்லிய வேளாண்மை, டிஜிட்டல் வேளாண் இயக்கம் மற்றும் சிறிய பண்ணைகளின் இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். கூடுதலாக, விவசாயத்தில் புதுமை மற்றும் மாற்றத்தை ஊக்குவிப்பதில் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ந்து வரும் பங்கை அவர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவின் முன்னுரிமைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் திரு கிரீன் எடுத்துரைத்தார். வேளாண் தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், இந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு தொடர்ந்து ஈடுபட வேண்டியதன் அவசியத்தை திரு கிரீன் வலியுறுத்தினார். வேளாண் தொழில்நுட்பம், தோட்டக்கலை, டிஜிட்டல் வேளாண்மை மற்றும் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐ.சி.ஏ.ஆர் பிரதிநிதிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆகியோரும் இந்த விவாதத்தில் பங்கேற்று,  கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

Read More »

ऑस्ट्रेलियाचे उच्चायुक्त श्री.फिलिप ग्रीन यांनी घेतली कृषी आणि शेतकरी कल्याण विभागाचे सचिव, डॉ.देवेश चतुर्वेदी,यांची सदिच्छा भेट

ऑस्ट्रेलियाचे उच्चायुक्त श्री.फिलिप ग्रीन यांनी  कृषी आणि शेतकरी कल्याण विभागाचे सचिव, डॉ.देवेश चतुर्वेदी,यांची काल नवी दिल्ली येथील कृषी भवनात  सदिच्छा  भेट घेतली. भारत आणि ऑस्ट्रेलिया यांच्यातील द्विपक्षीय संबंध अधिक दृढ करण्यासाठी तसेच कृषी आणि संलग्न क्षेत्रांमध्ये सहकार्याच्या नवीन संधीचा शोध घेण्यासाठी या बैठकीमुळे एक महत्त्वपूर्ण व्यासपीठ उपलब्ध झाले आहे. बैठकीदरम्यान डॉ.  …

Read More »