Thursday, December 19 2024 | 09:14:14 AM
Breaking News

விண்வெளிக் கழிவுகள் மேலாண்மை

Connect us on:

விண்வெளி நிலைத்தன்மைக்கான “விண்வெளி சூழ்நிலைமை விழிப்புணர்வின்”, வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், விண்வெளிப் பயணப் பாதுகாப்பு மற்றும் கழிவுகள் குறைப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் கவனம் செலுத்தவும், நெரிசலான விண்வெளி சூழலில் செயல்படுவதில் உருவாகி வரும் சவால்களை சமாளிக்கவும் பாதுகாப்பான மற்றும் நீடித்த விண்வெளி செயல்பாடுகள் மேலாண்மைக்கான இஸ்ரோ அமைப்பு(IS4OM) நிறுவப்பட்டுள்ளது.

விண்வெளிக் கழிவுகள் ஒருங்கிணைப்புக் குழு பரிந்துரைத்த சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்வெளிக் கழிவுகள் குறைப்பு வழிகாட்டுதல்களை இஸ்ரோ முடிந்தவரை பின்பற்றுகிறது.

அனைத்து இந்திய செலுத்து வாகனங்களுக்கும், மோதல் தவிர்ப்பு பகுப்பாய்வு ஏவுதல் சாளரத்திற்குள் மோதல் அச்சுறுத்தல் இல்லாத லிஃப்ட்-ஆஃப் நேரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  இஸ்ரோவின் செயல்பாட்டு செயற்கைக்கோள்களுக்கு ஏதேனும் நெருக்கமான அணுகல் ஆபத்து பற்றிய தொடர்ச்சியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்படும்போது மோதல் தவிர்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட கழிவுகள் இல்லாத விண்வெளி இயக்க  முயற்சியும் இஸ்ரோவால் முன்னெடுக்கப்படுகிறது. இது 2030-க்குள் அனைத்து இந்திய விண்வெளி செயல்பாட்டாளர்களாலும், அரசு மற்றும் அரசு சாரா விண்வெளி செயல்பாட்டாளர்களால் கழிவுகள் இல்லாத விண்வெளி பயணங்களை அடையும் நோக்கத்துடன் உள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல …