தொலைத் தொடர்புத் துறை (DoT) மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக சஞ்சார் சாத்தி இணையதளத்தை (www.sancharsaathi.gov.in) உருவாக்கியுள்ளது, இது சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகள், தேவையற்ற வணிக தகவல்தொடர்புகள் (UCC) குறித்து புகாரளிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வருவதாகத் தோன்றும் சர்வதேச ஏமாற்று அழைப்புகளை அடையாளம் காணவும் தடுக்கவும் தொலைத் தொடர்புத் துறையும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் (டி.எஸ்.பி) ஸ்பூஃப்ட் இன்கம்மிங் சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளனர். போலி டிஜிட்டல் கைதுகள், ஃபெடெக்ஸ் மோசடிகள், அரசு, காவல்துறை அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற மோசடிகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மோசடிகள் தொடர்பாக 1909-க்கு குறுந்தகவல் அனுப்பலாம் அல்லது 1909 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

