Friday, February 06 2026 | 12:21:05 AM
Breaking News

மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு இனி சுங்க வரி இல்லை

Connect us on:

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 23.07.2024 தேதியிட்ட அறிவிக்கை 30/2024 மூலம் டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கை எண் 05/2024 மூலம் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை- 2013-ன் படி, இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) வரிகள், தீர்வைகள் உட்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஒரு அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது, அதில் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதாலும், சுங்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாலும், குறைக்கப்பட்ட வரிகள், தீர்வைகளின் பலன்களை நுகர்வோருக்கு வழங்கவும், விலை மாற்றம் குறித்த தகவல்களை அளிக்கும் படிவம் II/V-ஐ தாக்கல் செய்யவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கூறிய அறிவிக்கைக்கு இணங்க, உற்பத்தியாளர்கள் இந்த மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை குறைத்து தகவல்களை தாக்கல் செய்தனர்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரசாயனம், உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …