இந்தியாவை உலகளாவிய பாதுகாப்பு ஆராய்ச்சி, தொழில்நுட்ப மையமாக மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அவற்றில் சில பின்வருமாறு:
(i) தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (TDF) திட்டம்: தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டம் என்பது இந்தியாவில் உற்பத்தி செய்யவும் என்ற முன்முயற்சியின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் முதன்மைத் திட்டமாகும்.
(ii) டிஆர்டிஓ தொழில்துறை கல்வி சிறப்பு மையம்: அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான நேரடி ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக பெங்களூரு ஐஐஎஸ்சி, பல்வேறு ஐஐடிக்கள், மத்திய/மாநில பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நாடு முழுவதும் டிஆர்டிஓ தொழில்துறை கல்வி சிறப்பு மையத்தை டிஆர்டிஓ நிறுவியுள்ளது.
(iii) பாதுகாப்பு, விண்வெளித் துறைகளில் புதுமையையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்புகள் (iDEX) கட்டமைப்பை அரசு தொடங்கியுள்ளது.
இதுவரை, பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக டி.டி.எஃப் திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்களுக்கு ரூ. 334.02 கோடி செலவில் மொத்தம் 79 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.