ஆயுதப் படைகளின் கொடி தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, இது நமது வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவம் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“ஆயுதப் படைகளின் கொடி நாள் என்பது நமது துணிச்சலான வீரர்களின் வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாகும். அவர்களின் துணிச்சல் நம்மை ஊக்குவிக்கிறது, அவர்களின் தியாகங்கள் நம்மை தலைவணங்கச் செய்கின்றன. அவர்களின் அர்ப்பணிப்பு நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு நாமும் பங்களிப்போம்.”