இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடையளவுத் துறை, எடையிடுதல், அளவிடும் சாதனங்களின் துல்லியத்தையுத் நம்பகத்தன்மையையும் உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கிறது. மனிதர்கள், விலங்குகளின் உடல் வெப்பநிலையை அளவிட வடிவமைக்கப்பட்ட மருத்துவ மின் வெப்பநிலைமானிகளின் (எலக்ட்ரிக்கல் தெர்மாமீட்டர்) தரப்படுத்தலையும் துல்லியத்தையும் மேம்படுத்த, வரைவு விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. காய்ச்சல், தாழ்வெப்பநிலை போன்ற நிலைமைகளைக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தகைய சாதனங்களுக்கான தற்போதுள்ள விதிமுறைகளை திருத்துவதை இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
துறையால் அமைக்கப்பட்ட குழுவால் வடிவமைக்கப்பட்ட வரைவு விதிகள், பொது ஆலோசனைக்காக 29 நவம்பர் 2024 அன்று துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட தரப்பினரும் பொதுமக்களும் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் 30 டிசம்பர் 2024-க்குள் சமர்ப்பிக்கலாம். வரைவு விதிகளை பின்வரும் இணைப்பில் இணையதளத்தில் காணலாம்.
https://consumeraffairs.nic.in/sites/default/files/file-uploads/latestnews/Draft%20Rules%20for%20Clinical%20Electrical%20Thermometer%20with%20Maximum%20Device.pdf
கருத்துகள் கேட்கும் இந்த முயற்சி நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் உடல் வெப்பநிலையை அளவிடுவதில் சீரான தன்மையை ஊக்குவிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
Matribhumi Samachar Tamil

