Thursday, December 19 2024 | 09:14:18 AM
Breaking News

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியில் ராஜஸ்தான் முன்னணியில் நிற்கிறது என்று மத்திய அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி கூறினார்

Connect us on:

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு ராஜஸ்தானின் முன்னோடி பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியில் ராஜஸ்தான் முன்னணியில் நிற்கிறது என்று கூறினார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ரைசிங் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில்’ ‘நிலையான எரிசக்தி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம்’ குறித்த அமர்வில் அமைச்சர் உரையாற்றினார். தைரியமான இலக்குகள், தொலைநோக்கு சிந்தனை கொள்கைகள் மற்றும் சமீபத்திய முதலீடுகள் மூலம், ராஜஸ்தான் நிச்சயமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சக்தியாக மாறுவதற்கான பாதையில் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

ராஜஸ்தானின் ஒருங்கிணைந்த தூய்மையான எரிசக்தி கொள்கை 2024 சமீபத்தில் தொடங்கப்பட்டதை மத்திய அமைச்சர் ஜோஷி பாராட்டினார், இது 2030 க்குள் 125 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற தேசிய இலக்கை அடைவதற்கு இந்தக் கொள்கை குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சலுகைகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான வெற்றிகரமான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ராஜஸ்தானின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று திரு ஜோஷி கூறினார்.

மாநிலத்தின் சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், ராஜஸ்தானில் 30.31 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் நிறுவப்பட்டுள்ளது என்றும், சூரிய மின்சக்தி 24.55 ஜிகாவாட் பங்களிப்பு செய்வதாகவும், இந்த களத்தில் ராஜஸ்தான் தேசிய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீட்டாளர்களுக்கு தாராளமான ஊக்கத்தொகைகளை வழங்கும் ராஜஸ்தான் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டம் 2024-ஐயும் அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் அரசின் எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஹீரா லால் நகர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

மாநிலங்களவை உறுப்பினர் திரு சரத் பவார் விவசாயிகள் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தார்

மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக …