Saturday, December 06 2025 | 08:00:40 AM
Breaking News

ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா

Connect us on:

ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா என்ற தனி பிரிவை அரசு 2023 ஜூலை 27  அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுஷ் விசா நான்கு துணை வகைகளின் கீழ் கிடைக்கிறது: (i) ஆயுஷ் விசா (AY-1), (ii) ஆயுஷ் உதவியாளர் விசா (AY2), (iii) இ-ஆயுஷ் விசா மற்றும் (iv) இ-ஆயுஷ் உதவியாளர் விசா. ஆயுஷ் விசா ஆயுஷ் அமைப்புகள் மூலம் சிகிச்சை பெறுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவுக்கு வரும் ஒரு வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது. அரசு அமைப்புகள் அல்லது மருத்துவமனை & சுகாதார சேவை வழங்குபவர்களுக்கான தேசிய அங்கீகரிப்பு  வாரியம் அல்லது ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் அல்லது இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள மருத்துவமனை/நல்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வருகை புரிபவர்களுக்கு ஆயுஷ் விசா வழங்கப்படுகிறது.

04.12.2024 வரை மொத்தம் 123 வழக்கமான ஆயுஷ் விசா, 221 இ-ஆயுஷ் விசா மற்றும் 17 இ-ஆயுஷ் உதவியாளர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ பராமரிப்பு அல்லது ஆரோக்கிய சேவைகளை நாடும் எந்தவொரு சர்வதேச நோயாளியும் வருகை தருவதன் மூலம் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா தளத்தைப் பார்வையிடலாம்www.healinindia.gov.in.

 மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்

இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் …