Saturday, December 06 2025 | 02:04:17 AM
Breaking News

ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து இடைமுக பிளாட்ஃபாரம் அறிமுகம் தரவுகளைத் தொழிற்சாலைகள் பெறுவதை எளிதாக்குகிறது

Connect us on:

தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை 2022-ன் கீழ், சரக்குப் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சரக்கு ஏற்றுதல் போன்ற முக்கிய சவால்களை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிலக்கரி துறையில் திறன்மிக்க சரக்கு போக்குவரத்து துறைக்கான துறைசார் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களது சரக்கு போக்குவரத்து கொள்கைகளை அறிவித்துள்ளன. அறிவிக்கப்பட்ட கொள்கைகளின் விவரங்களை https://dpiit.gov.in/logistics/state-logistics-policies -தளத்தில் பார்க்கலாம்.

பல்வேறு மாநிலங்களுக்கிடையில் சரக்குப் போக்குவரத்தை எளிமையாக்குதலின்  5-வது பதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர்  16 அன்று தொடங்கப்பட்டது.

கிடங்கு தரநிலைகள் குறித்த மின்-கையேடு 2022-ல் வெளியிடப்பட்டது.

பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், விரைவு சக்தி சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பன்முக சரக்கு போக்குவரத்து பூங்காக்களின் வளர்ச்சி, இந்திய விமான நிலைய ஆணையத்தின் விமான சரக்கு போக்குவரத்து வசதிகளின் மேம்பாடு மற்றும் அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து  இணையதளம் மற்றும் சரக்கு போக்குவரத்து தரவு வங்கி போன்ற டிஜிட்டல் முன்முயற்சிகள் ஆகியவை   குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது: பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார நிலை வலுவாக உள்ளது என பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் …