Sunday, December 21 2025 | 08:10:40 AM
Breaking News

புதிய குற்றவியல் சட்டங்கள்

Connect us on:

பாரதிய நியாயச் சட்டம், 2023-ன் விதிகளில் பிரிவு 106 துணைப்பிரிவு (2), பாரதிய நகரிகா சுரக்ஷா சன்ஹிதா 2023 சட்டத்தின் முதல் அட்டவணை, பாரதிய சாட்சியங்கள் சட்டம் 2023 ஆகியவை 2023 டிசம்பர், 25 அன்று அறிவிக்கப்பட்டு, 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன,

பாரதிய நியாயச் சட்டத்தில்  முதல்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விதிகள் ஒரே பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிக்கு ஆயுள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படும். திருமணம், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு அல்லது அடையாளங்களை மறைத்து உண்மைக்கு புறம்பான வாக்குறுதியின்   பேரில்   வன்புணர்வு கொள்வது போன்ற புதிய குற்றங்களும் இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகள் அவசியம்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகளின் அவசியத்தை, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாநில பொதுப்பணி ஆணையகங்கள்  தலைவர்களின் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். நாட்டைக் கட்டமைப்பதில் பொதுப்பணி ஆணையங்களின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அதிகாரிகளின் தகுதிகள் நிலைநிறுத்தப்படுவது மட்டுமின்றி, அது குறித்து வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நிர்வாக அமைப்புகளின் தரம், நேர்மை, செயல்திறனை வடிவமைப்பதில் பொதுப் பணி ஆணையங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். நாட்டிற்காக சேவையாற்றுவதற்கு திறமையான, பாரபட்சமற்ற மற்றும் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றும் தனிநபர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ள அரசியல் சாசன  நிறுவனங்களாக பொதுப் பணி ஆணையகங்கள் திகழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குடிமைப் பணிகளின் மீதான மாறிவரும் தேவைகளை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் நிர்வாகம், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், பொருளாதார மாற்றம் போன்ற தேசிய நலன் சார்ந்து நடவடிக்கைகளுக்கு அரசு அளித்து வரும் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது,தேர்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணி அலுவலர்களின் தரத்தைப் பொறுத்தது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.