Tuesday, June 23 2026 | 09:28:15 PM
Breaking News

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

Connect us on:

தற்போது நாட்டில் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக எதிர்கொள்ள, மத்திய அரசு 2015-ம் ஆண்டில் ‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்துக்கு’ ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை, பாதுகாப்பு    தொடர்பான    நடவடிக்கைகள்,    மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய    பல்முனை உத்திகளுக்கு    வழிவகுக்கிறது.

· இக்கொள்கையின் உறுதியான அமலாக்கத்தின் விளைவாக தொடர்ந்து வன்முறை குறைந்துள்ளது. 2010-ல் இடதுசாரி தீவிரவாதம் வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 73% குறைந்துள்ளது. இதன் விளைவாக ஏற்படும் இறப்புகள் (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) 2010-ல் 1005 ஆக இருந்த நிலையில், அது 86% குறைந்து 2023-ல் 138 ஆக குறைந்துள்ளது. நடப்பு 2024-ம் ஆண்டில் (15.11.2024 வரை), இடதுசாரி தீவிரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களில் 25% வெகுவாக குறைந்துள்ளது.

· இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், 2013-ல் 10 மாநிலங்களில் 126-ஆக இருந்தது, 2024-ல் (ஏப்ரல் 2024 முதல்) 09 மாநிலங்களில் 38 மாவட்டங்களாக குறைந்துள்ளதால், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் புவியியல் ரீதியான பரவலும் கணிசமாகக் குறைந்துள்ளது.

இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் குறித்து புகார் அளிக்கும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 465 ஆக இருந்தது, 2023-ம் ஆண்டில் 171 காவல் நிலையங்களாக கணிசமாகக் குறைந்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

இந்தியாவில் வீட்டு கூரையில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் மற்றும் நெட் மீட்டர் கருவி

PM சூர்யா கர் திட்டம் 2026: 31 லட்சம் வீடுகளுக்கு இலவச மின்சாரம் – முழு விவரம்

இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும், சாமானிய மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட PM சூர்யா …