நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாக சாகர்மாலா அமைந்துள்ளது. இத்திட்டம் துறைமுக உள்கட்டமைப்பு, கடலோரக் கப்பல் நிறுத்தம், சாலை, ரயில் போக்குவரத்து, மீன்பிடி துறைமுகங்கள், திறன் மேம்பாடு, கடலோர சமூக மேம்பாடு, சர்வதேச தரத்திலான கப்பல் முனையம், ரோ-பாக்ஸ் படகு சேவைகள் போன்ற தனித்துவமான, புதுமையான திட்டங்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.1240 கோடி மதிப்பிலான 22 பணிகளுக்கு தமிழ்நாட்டிற்கு பகுதி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.