2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அடைய கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி புதிய மெகா துறைமுகங்களை நிறுவுதல் மற்றும் பெரிய கப்பல்களைக் கையாளும் வகையில் ஆழமான துறைமுகங்களை உருவாக்குதல், துறைமுகங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்குதல், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான “ஹரித் சாகர்” பசுமை துறைமுக வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பசுமை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.