Wednesday, December 24 2025 | 02:07:31 AM
Breaking News

உண்டு உறைவிடக் கல்வித் திட்டம்

Connect us on:

குறிப்பிட்ட பகுதிகளில் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்வித் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது:

முதலாவது ஆண்டு தோறும் 3,000 திறன் வாய்ந்த  ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச்“ சேர்ந்த மாணவர்கள் மத்திய இடைநிலை  கல்வி வாரியம் அல்லது மாநில கல்வி வாரியங்களால் இணைக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை  நடத்தும் நுழைவுத் தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12-ம் வகுப்பு வரை அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இரண்டாவதாக ஆதிதிராவிட மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள், தொடக்க, இடைநிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயன்முறை – முதல் வகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிட மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

வ. எண் ஆண்டுகள் தேர்வு செய்யப்பட்ட எஸ்.சி., மாணவர்கள்
1 2022-23 1,468
2 2023-24 2,543
3 2024-25 2,961
மொத்தம் 6,972

மத்திய அரசின் திட்டம் என்பதால், 2021-22 முதல் 2023-24-ம் ஆண்டு வரை மாநில வாரியாக நிதி ஒதுக்கீட்டிற்கான தரவுகள் மற்றும் நிதி விடுவிப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

(ரூ. கோடியில்)

வ. எண் ஆண்டுகள் திருத்திய மதிப்பீடு செலவு
1 2021-22 63.21 38.04
2 2022-23 89.00 51.12
3 2023-24 90.65 81.57
மொத்தம் 242.86 170.73

இத்திட்டத்தின் இரண்டு முறைகளின் கீழ் உள்ள மொத்த உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

முறை-1 246
முறை-2 51
மொத்தம் 297

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சார்பில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், இன்று (21.12.2025) உலக தியான தினத்தைக் கொண்டாடியது. இதனையொட்டி, புகழ்பெற்ற அறிஞர்கள், யோகா பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற சிறப்பு தியான அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக அளவில் அதிகரித்து வரும் மன அழுத்தத்தை நீக்குவதில் பழங்கால யோக ஞானம், நவீன மருத்துவ அறிவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் காஷிநாத் சமகாந்தி, இன்றைய போட்டி நிறைந்த உலகில் தியானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீத மன அழுத்தம் தொழில் சார்ந்ததாக உள்ளது என்று அவர் கூறினார்.  புது தில்லியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த சுவாமி முக்திமாயனந்தா பேசுகையில் நிலையான அமைதிக்காக தியானப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  கர்வம், பொறாமை, அளவுக்கு அதிகமான ஆசைகள் போன்றவற்றை வெற்றி கொள்ள, முறையான பயிற்சிகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார் . பல்வேறு தியான நுட்பங்களின் நடைமுறை செயல் விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. “ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான இந்தியா” என்ற தொலைநோக்கு பார்வையை மேம்படுத்துவதற்காக அன்றாட வாழ்வில் தியானத்தை இணைப்பதற்கான உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவடைந்தது. யோகா, தியான ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒவ்வொரு தனிநபரும் உயர்ந்த உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், …