Wednesday, January 14 2026 | 09:06:51 AM
Breaking News

சாகர் பரிகிரமா பயணத் திட்டம்

Connect us on:

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை சார்பில், 75-வது இந்திய விடுதலைப் பெருவிழா கொண்டாட்டத்தையொட்டி நாட்டின் கடலோரப் பகுதிகளை படிப்படியாக மேம்படுத்துவதற்கு ‘சாகர் பரிக்கிரமா’ என்ற விரிவான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மாண்ட்வியில் தொடங்கிய இத்திட்டம் 12 கட்டங்களாக 80 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 113 பகுதிகளில் 12 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. 12 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 7,440 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதியை உள்ளடக்கியதாக இருந்த இந்த பயணம் 11.01.2024 அன்று மேற்கு வங்கத்தின் கங்கா சாகரில் நிறைவடைந்தது.

சாகர் பரிகிரமா பயணத் திட்டத்தின் நோக்கம் (i) மீனவர்கள், கடலோர சமூகங்கள், அத்துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு மீன்வளம் தொடர்பான திட்டங்கள், அது சார்ந்த தகவல்கள் மூலம் தற்சார்பு நிலையை உருவாக்குதல் (iii) நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடல்விளை மீன்வளத்தைப் பயன்படுத்துவதற்கும் கடலோர மீனவ சமூகங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இடையில் நீடித்த சமநிலையைப் பேணுதல் (iv) கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை மையமாகக் கொண்டு மீன்வளத்தை மேம்படுத்துதல்.

இந்தத் தகவலை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் 2024 டிசம்பர் 10 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக …