நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் (இந்திய தலைமைப் பதிவாளர் கூற்றுப்படி), சுமார் 6,22,840 கிராமங்களில் செல்பேசி வசதி உள்ளது, இவற்றில் 6,14,564 கிராமங்கள் 30.09.2024 நிலவரப்படி 4ஜி சேவை இணைப்பு பெற்றுள்ளன.
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் பிரதமரின் பழங்குடியின நியாய மகா இயக்கத்தின் கீழ், 4,543 குறிப்பாக பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினர் குடியிருப்புகள், செல்பேசி வசதி இல்லாதவை என கண்டறியப்பட்டு, அவற்றில் 1,136 குடியிருப்புகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குடியிருப்புகள் உட்பட நாட்டின் ஊரக, தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் செல்போன் கோபுரங்களை நிறுவுவதன் மூலம் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக டிஜிட்டல் பாரத் நிதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது.31.10.2024 நிலவரப்படி, பல்வேறு டிஜிட்டல் பாரத நிதியுதவியுடன் 1,018 செல்பேசி கோபுரங்கள் கட்டுவதற்கு ரூ.1,014 கோடி மதிப்பீட்டில் இந்தக் குடியிருப்புகளுக்கு 4ஜி வசதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலைத் தெரிவித்தார்.