நாட்டில் 3,696 புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட செயல்திறன் தணிக்கை மற்றும் தொடர் கணக்கெடுப்பின் பணிகளின் போது, 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் பழம்பெருமை வாய்ந்த தலங்கள், சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
தடைசெய்யப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் புகார் தெரிவித்தால் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் பாதுகாப்புச்சட்டம் 1958-விதிகளின்படி இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
தடை செய்யப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை விவரங்கள் தனி இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.