ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 12 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பெய்த கனமழை காரணமாக, தாஜ்மஹாலின் பிரதான கல்லறையின் கூரை வழியாக நீர்க்கசிவு காணப்பட்டது. இருப்பினும், பருவமழைக் காலங்களில் கடுமையான கசிவு, விரிசல் மற்றும் சேதங்கள் எதுவும் காணப்படவில்லை.
பெரிய அளவில் சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சிறிய இடைவெளிகள் வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டது. லிடார் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி விரிவான ஆய்வுக்குப் பிறகு, நீர்க்கசிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.