Wednesday, March 11 2026 | 08:27:45 PM
Breaking News

நாடாளுமன்ற கேள்வி: பாலசோரில் டாப்ளர் ரேடார் நிலையம்

Connect us on:

டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நெட்வொர்க்கானது முக்கியமாக இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரை சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை கணிப்பதற்காக இந்தக் கட்டமைப்பு வானிலை முன்கணிப்பு மாதிரிகளில், குறிப்பாக நவ்காஸ்ட் மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த டி.டபிள்யூ.ஆர்களின் உதவியுடன் தகுந்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

பாலசோரில் உள்ள டி.டபிள்யூ.ஆர் கட்டிடத்தை மாநில அரசு 2025 மார்ச் மாதத்திற்குள் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிடம் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, டி.டபிள்யூ.ஆர் பாலசோரின் நிறுவல் மற்றும் இயக்கம் நிறைவடையும்.

ஒடிசா மாநிலத்தில் (பாலசோர், சம்பல்பூர் மற்றும் புவனேஸ்வரில்) மூன்று டி.டபிள்யூ.ஆர் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 39 டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நிறுவப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டுக்குள் மேலும் 87 மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”

சென்னை,மார்ச் 2: இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி  (Let’s Goa 2026 …