உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் தனது திட்டங்கள் மூலம் உணவு பதனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய, பிரதமரின் உணவு பதனப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000/- வரை ஆரம்ப மூலதனத்திற்கு அமைச்சகம் மானியம் வழங்குகிறது. தனிநபர் சுய உதவிக் குழு உறுப்பினர் திட்ட மதிப்பீட்டில் 35% கடன் இணைக்கப்பட்ட மானியத்தை அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை உணவு பதனப்படுத்தும் நிறுவனத்தின் ஒரு அலகாகப் பெறலாம். சுய உதவிக் குழுக்கள் பிரதமரின் உழவர் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான துணைத் திட்டங்களின் கீழ் உதவி பெறவும் தகுதி பெற்றுள்ளனர்.
பிரதமரின் வனப்பகுதி மேலாண்மைத் திட்டத்தின் ஆதார மூலதனம், அந்தந்த மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்கள் மற்றும் மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 3,10,121 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக ரூ.1032.31 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், 2,47,984 கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.810.89 கோடியும், நகர்ப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.221.42 கோடியும் 31.10.2024 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு இத்தகவலை தெரிவித்தார்.