Saturday, December 06 2025 | 02:38:01 PM
Breaking News

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

Connect us on:

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி டிசம்பர் 15 முதல் 18 வரை நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா செல்கிறார்.

இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அவரது இந்தப் பயணத்தின்போது கவனம் செலுத்தப்படும்.

இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ஜாஃப்ரி ஸ்ஜாம்சோதீன் (ஓய்வு), இந்தோனேசிய ஆயுதப்படைத் தளபதி ஜெனரல் அகஸ் சுபியான்டோ, இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அலி உள்ளிட்ட உயர்மட்ட இந்தோனேசிய அரசுத் தலைவர்களுடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் தினேஷ் கே திரிபாதி ஈடுபட உள்ளார். இந்த சந்திப்புகளின்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, கூட்டு பயிற்சி முயற்சிகள், இரு கடற்படைகளுக்கு இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்படும்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா-இந்தோனேசியா கடல்சார் ஒத்துழைப்பின் பகிரப்பட்ட தொலைநோக்குக்கு இணங்க இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கடல்சார் உறவுகளை இந்த பயணம் எடுத்துக் காட்டுகிறது.

About Matribhumi Samachar

Check Also

ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்

இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் …