குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2024 டிசம்பர் 17 முதல் 21 வரை ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் பயணம் மேற்கொள்கிறார் . இந்த பயணத்தின்போது, செகந்திராபாத்தில் உள்ள போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் தங்குகிறார்.
டிசம்பர் 17 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
டிசம்பர் 18 அன்று, செகந்திராபாத்தின் போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார் .
டிசம்பர் 20 அன்று, செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு குடியரசுத் தலைவரின் கொடிகளை குடியரசுத் தலைவர் வழங்குவார். அன்று மாலை குடியரசுத் தலைவர் நிலையத்தில் மாநிலத்தின் பிரமுகர்கள், முக்கிய நபர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கிறார்.
Matribhumi Samachar Tamil

