Sunday, May 17 2026 | 01:03:56 AM
Breaking News

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு அருங்காட்சியகங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் அதிக நிதி ஒதுக்கீடு

Connect us on:

மண்டல, மாநில, மாவட்ட அளவில் மத்திய அரசு, மாநில அரசுகள், சங்கங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள் ஆகியவற்றால் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படுகிறது.  தற்போதுள்ள அருங்காட்சியகங்களை வலுப்படுத்துதல், நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் உதவி வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள கலைப் பொருட்களை டிஜிட்டல் மயமாக்கி, அவை தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்,

அருங்காட்சியக வல்லுநர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2019-2024 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அருங்காட்சியக மானிய உதவித் திட்டத்தின் கீழ் அதிகபட்ச நிதியுதவி பெற்ற முதல் 10 மாநிலங்கள்:

1. மிசோரம்

2. மத்தியப் பிரதேசம்

3. ஆந்திரப் பிரதேசம்

4. நாகாலாந்து

5. உத்தரப் பிரதேசம்

6. மணிப்பூர்

7. தமிழ்நாடு

8. ராஜஸ்தான்

9. மேற்கு வங்காளம்

10. குஜராத்

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

இந்தியாவில் வீட்டு கூரையில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் மற்றும் நெட் மீட்டர் கருவி

PM சூர்யா கர் திட்டம் 2026: 31 லட்சம் வீடுகளுக்கு இலவச மின்சாரம் – முழு விவரம்

இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும், சாமானிய மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட PM சூர்யா …