பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவிற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்சுடன் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் தலைமையின் கீழ், பிரான்ஸ் இந்த துயரத்தை உறுதியுடன் சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“மயோட்டேவில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து ஆழ்ந்த கவலை அடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் தலைமையின் கீழ், பிரான்ஸ் இந்த துயரச் சம்பவத்தை மன வலிமையுடனும், உறுதியுடனும், சமாளிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியா, பிரான்சுடன் ஒன்றுபட்டு நிற்கிறது, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது.”