Wednesday, December 24 2025 | 06:52:43 AM
Breaking News

வேளாண் நிலங்களில் இயற்கை கார்பன்

Connect us on:

வேளாண் நிலங்களில் இயற்கை கார்பன் இருப்பது குறித்து  மண் வள அட்டை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்வள அட்டையை மாநிலங்கள் புதுப்பிக்க வேண்டும். இதுவரை 24.60 கோடி சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மண்ணில் இயற்கை கார்பன் அளவு  குறைவதற்கான முக்கிய காரணிகள் (i) இரசாயன உரங்களின் முறையற்ற அல்லது அதிகப்படியான பயன்பாடு, அடிக்கடி மண்ணை உழவு, செய்தல், பயிர்க்கழிவுகளை எரித்தல், அதிகப்படியான மேய்ச்சல், மண் அரிப்பு போன்ற குறைபாடுள்ள நடைமுறைகள். (ii) நீண்ட கால  தாவர வகைகளுக்குப் பதிலாக ஒரே மாதிரியான பயிர்கள், மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துதல், (iii) மண்ணின் மொத்த அடர்த்தி, அதிக சரளை உள்ளடக்கம், மண் அரிப்பு, குறைந்த நிலத்தடி நீர், குறைந்த ஈரப்பதம் போன்ற மண்ணின் இயற்பியல் வேதியியல் பண்புகள்.

இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகளுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம்  மண்வளத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மண்ணில் உள்ள இயற்கை கார்பனின் அளவு தொடர்பான விவரங்களை மாநில சுய உதவிக் குழுவிற்கு அளித்து, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்ட உரங்களுடன் இரசாயன உரங்களையும், இயற்கை உரங்கள், உயிர் உரங்களையும் சரியான முறையில் பயன்படுத்தி, மண்ணின் அங்கக இயற்கை கார்பன் மற்றும் வளத்தை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகள் அவசியம்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகளின் அவசியத்தை, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாநில பொதுப்பணி ஆணையகங்கள்  தலைவர்களின் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். நாட்டைக் கட்டமைப்பதில் பொதுப்பணி ஆணையங்களின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அதிகாரிகளின் தகுதிகள் நிலைநிறுத்தப்படுவது மட்டுமின்றி, அது குறித்து வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நிர்வாக அமைப்புகளின் தரம், நேர்மை, செயல்திறனை வடிவமைப்பதில் பொதுப் பணி ஆணையங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். நாட்டிற்காக சேவையாற்றுவதற்கு திறமையான, பாரபட்சமற்ற மற்றும் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றும் தனிநபர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ள அரசியல் சாசன  நிறுவனங்களாக பொதுப் பணி ஆணையகங்கள் திகழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குடிமைப் பணிகளின் மீதான மாறிவரும் தேவைகளை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் நிர்வாகம், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், பொருளாதார மாற்றம் போன்ற தேசிய நலன் சார்ந்து நடவடிக்கைகளுக்கு அரசு அளித்து வரும் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது,தேர்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணி அலுவலர்களின் தரத்தைப் பொறுத்தது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.