வேளாண் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், மாற்று சந்தை வழிவகைகளை உருவாக்கவும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை உறுதி செய்யும் வகையில் சந்தை ஏற்றத் தாழ்வுகளை தணிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேளாண் சந்தை, 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான நடவடிக்கைகள் இணையதள சேவை மூலம் சந்தைகள், வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டம், பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விலை ஆதரவு ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
இத்திட்டத்தின் துணை திட்டமான சந்தைப்படுத்தல், ஆராய்ச்சி மற்றும் தகவல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வேளாண் விளைபொருட்களின் விலைகள் மற்றும் அதன் விநியோகம் குறித்த அன்றாட தகவல்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 3,771 சந்தை வளாகங்களில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளைப் பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விவசாய விளைபொருட்களின் தரநிலைக்கான இணையதளம், இ-நாம் இணையதளம், கிசான் சுவிதா போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.