Wednesday, December 10 2025 | 07:36:53 AM
Breaking News

கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.

Connect us on:

2021 ஜூலை 6-ம் தேதி முதல், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் & கூட்டுறவு சங்கங்கள் மற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக வரி தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஊக்குவிப்பதே கூட்டுறவு அமைச்சகத்தின் கடமையாகும். கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி 25.11.2024 தேதியிட்ட குறிப்பாணை தமிழக கூட்டுறவு அமைச்சரிடமிருந்து பெறப்பட்டது. ஜிஎஸ்டி வரி தொடர்பான முன்மொழிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்கிறது. அண்மையில் கருப்பஞ்சாற்றுக் கசண்டு மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு பயனளிக்கும்.

கூட்டுறவு சங்கங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்க மத்திய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கணினிமயமாக்கல் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்கு ரூ.2,516 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும்  பொதுவான கணினி அடிப்படையிலான தேசிய மென்பொருளின் கீழ் கொண்டு வந்து, அவற்றை நபார்டு வங்கியுடன் இணைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 67,930 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40,727 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் கணினி மென்பொருளுடன் இணைப்பதற்காக வன்பொருள் 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் கணினி வன்பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருள் பயன்பாடு குறித்த சட்டம்

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம், 1987 – ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. இது சரக்குகளை சிப்பமாகக் கட்டுவதற்கான பொருளில் எந்த …