Friday, December 05 2025 | 11:07:25 PM
Breaking News

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் எல்பிஜி எரிவாயுவை விநியோகிக்க அனுமதி

Connect us on:

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பிஏசிஎஸ்) செயல்பாடுகளை விரிவுபடுத்தி, அதன் மூலம் அவற்றை நிதி ரீதியாக வலுவாகவும், நிலையானதாகவும் ஆக்குவதற்காக, அவை சமையல் எரிவாயு டீவர்ஷிப் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து பிஏசிஎஸ்-ஐ சமையல் எரிவாயு விநியோகஸ்தராக தகுதி பெறச் செய்துள்ளது.

விரிவான அடிமட்ட கட்டமைப்புடன், கிராமப்புற சமூகங்களிடையே நம்பிக்கையுடன் செயல்படும் பிஏசிஎஸ், தொலைதூரப் பகுதிகளில் எல்பிஜி விநியோகத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி எல்பிஜி விநியோகத்தை பரவலாக வழங்குவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், தொலைதூர விநியோகஸ்தர்களை சார்ந்திருப்பதைக் குறைக்கும். கிராமப்புற குடும்பங்களுக்கு வசதியை மேம்படுத்தும்.

பிஏசிஎஸ்கள் மூலம், சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுவதால், விவசாயிகளின் நேரமும். உழைப்பும் வீணாவது தடுக்கப்படும். இந்த நேரத்தை அவர்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …